பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானாவின் ஹைதராபாத் நிஜாபேட்டையில் உள்ள அவரது வீடு, தொடர்ந்து உள்புறம் பூட்டி இருந்ததோடு, தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பதில் இல்லாததால் போலீஸுக்கு தகவல் அளித்தனர். போலீஸார் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் கட்டிலில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.