திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி தனது நெருங்கிய நண்பர்களுடன் விஐபி தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதையை செய்தனர். பின்னர், கோயிலுக்கு வெளியே நடிகை மீனாட்சி சவுத்ரியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.