பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அப்பாவி ஆண்களை சிக்க வைக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றைய காலகட்டத்தில் அப்பாவி மக்கள் மீது கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு உள்ளதாக கூறிய நீதிமன்றம், புகார்தாரர் பெண் என்பதால், அவர் கூறுவது முற்றிலும் உண்மை என எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தது.