கர்நாடகா... மாணவியை உருக உருக காதலித்த இளைஞர். இளைஞரின் சுயரூபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி. தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மாணவியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம். மாணவியின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய 3 பேரும் சிக்கினார்களா? நடந்தது என்ன?கண் கலங்குனபடியே, சோகமான முகத்தோட கல்லூரி மாணவி ஒருத்தங்க மாகடி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ருக்காங்க. சார், நான் ஒரு காலேஜ் ஸ்டூடன்ட், லவ் பண்றன்னு நம்ப வச்சு விகாஸ், பிரசாந்த், சேத்தன்னு 3 பேரு என்னோட வாழ்க்கையவே கெடுத்துட்டாங்க சார்ன்னு சொல்லி கதறி அழுதுருக்காங்க.உடனே, அந்த புகார வாங்குன போலீஸ், அந்த 3 பேரையும் பிடிச்சு அவங்கள தங்களோட கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க.கர்நாடகாவுல உள்ள மாகடி டவுனை சேந்த 19 வயது இளம்பெண் ஒருத்தங்க ஒரு கல்லூரியில 2ம் ஆண்டு படிச்சுட்டு இருக்காங்க. இவங்களுக்கும் மாகடி பகுதிய சேந்த விகாஸ்-ங்குற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் நல்ல நட்பா பழகிருக்காங்க. அடுத்து ஃபோன் நம்பர பரிமாறிக்கிட்ட ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸா பேச ஆரம்பிச்சுருக்காங்க. அடுத்து கொஞ்ச நாட்கள்லையே விகாஸ் அந்த மாணவி கிட்ட காதலையும் சொல்லிருக்காரு.ஆரம்பத்துல, அந்த பெண் விகாஸ காதலிக்க மறுத்தாலும், அதுக்கப்புறம் அந்த மாணவியும் விகாஸ காதலிக்க ஆரம்பிச்சுருக்காங்க. அடுத்து அந்த ரெண்டு பேரும் அடிக்கடி வெளியில போறது, ஊர் சுத்துறதுன்னு ஜாலியா இருந்துருக்காங்க.ஒரு நாள், ஆள் இல்லாத நேரத்துல மாணவியோட வீட்டுக்கு போய்ருக்காரு விகாஸ். அப்ப அவரு அந்த மாணவிய வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் பண்ணி அத செல்போன்ல வீடியோவும் எடுத்து வச்சுருக்காரு.அதுக்கப்புறம் தன்னோட உண்மை முகத்த காட்டுன விகாஸ், நான் கூப்புடுற நேரத்துல எல்லாம் நீ என்னோட வீட்டுக்கு வரனும், அப்படி இல்லன்னா இந்த வீடியோ சோசியல் மீடியாவுல ரிலீஸ் பண்ணிருவேன்னு சொல்லி மிரட்டிருக்காரு.விகாஸோட பேச்ச கேட்டு அதிர்ச்சியான அந்த மாணவி, நான் உன்ன உண்மையா உயிருக்கு உயிரா லவ் பண்ணேன், ஆனா நீ எதுக்கு என்ன இப்படி மிரட்டுறன்னு கேட்டு சண்டை போட்ருக்காங்க.ஆனா, அந்த நேரத்துல மிருகமா மாறுன விகாஸ், நீ என்கூட மட்டும் இல்ல, என்னோட நண்பர்களான பிரசாந்த், சேத்தன் கூடவும் தனிமையில இருக்கன்னுன்னு சொல்லி மிரட்டிருக்காரு. இதகேட்டு கொதிப்படைஞ்ச மாணவி, உன்ன லவ் பண்ண பாவத்துக்கு, எதுக்கு என்னைய போட்டு இப்படி சித்ரவதை பண்ற, நீ நினைக்குற மாதிரி மோசமான பொண்ணு நான் கிடையாது, என்ன தயவு செஞ்சு விட்ரு, நான் எங்கையாச்சு போய்றேன்னு சொல்லிருக்காங்க.ஆனா, கொஞ்சம் கூட மனசு இறங்காத விகாஸ், என்னையவே நீ மிரட்டுறியா, இரு நம்ம தனிமையில இருந்த வீடியோவ ரிலீஸ் பண்றேன்னு சொல்லி மிரட்டிருக்கான். அதுக்கு அந்த மாணவி, அந்த வீடியோ ரிலீஸ் ஆச்சுன்னா என் வாழ்க்கையே நாசம் ஆயிரும், அப்புறம் நான் உயிரோடையே இருக்க மாட்டேன், எங்க அப்பா, அம்மாவும் என்ன அந்த கோலத்துல பாத்தா அவங்களும் சூசைட் பண்ணிப்பாங்க, அதனால வீடியோவ ரிலீஸ் பண்ணிறாதன்னு கெஞ்சுருக்காங்க.அதுக்கப்புறம் மாணவிய வலுக்கட்டாயமா சேத்தனோட வீட்டுக்கு கூப்டு போன விகாசும், பிரசாந்தும் அந்த மாணவிய மாறி மாறி பாலியல் பலாத்காரம் பண்ணிருக்காங்க. இந்த கொடூரம் அந்த மாணவிக்கு ரொம்ப நாட்களா நீடிச்சதா கூறப்படுது.இந்த வன்கொடுமை சம்பவத்தால பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி வெளியுலகத்திற்கு தெரிஞ்சா நம்ம வாழ்க்கையே கேள்விக்குறியாகிரும்ன்னு நினைச்சு, அத யார்கிட்டயும் சொல்லாம மனசுக்குள்ள வச்சு டெய்லி அழுதுக்கிட்டே இருந்துருக்காங்க. ஆனா, கொஞ்சம் நாள் கழிச்சு, தன்னோட மனச தைரியப்படுத்திக் கிட்ட மாணவி நடந்த எல்லாத்தையும் வீட்ல சொல்லிருக்காங்க.அதுக்கடுத்து பெற்றோரோட காவல் நிலையம் சென்ற மாணவி 3 பேர் மேலேயும் புகார் அளிச்சுருக்காங்க. அந்த புகார வச்சு விகாஸ், பிரசாந்த், சேத்தன்னு 3 பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.