மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாலியல் விவகாரம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மனு மீதான தீர்ப்பு அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.