தெலங்கானா... வீட்டின் மாடியில் சடலமாக கிடந்த கணவன். நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக கபட நாடமாகடிய மனைவி. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மூலம் வசமாக சிக்கிய பெண். உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் இருந்ததால் அதிர்ச்சி. அடுத்தடுத்த விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்கள். கணவன் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?தெலங்கானா மாநிலம், மேடிபள்ளி பகுதிய சேந்த அசோக், பூர்ணிமா தம்பதிக்கு ஒரு மகன் இருக்கான். அசோக் ஒரு ப்ரைவேட் காலேஜ்ல வேலை பாத்துட்டு இருக்காரு. அது மட்டும் இல்லாம வீட்லையை கணவனும் மனைவியும் சேந்து ஒரு ப்ளே ஸ்கூலும் வச்சு நடத்திட்டு இருக்காங்க. அசோக் மனைவி, மகன்னு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்துருக்காரு. இதுக்கிடையில பூர்ணிமாவுக்கும் பக்கத்து வீட்டுல உள்ள மகேஷ்ங்குற இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் செல்போன் நம்பர பரிமாறிக்கிட்டு அடிக்கடி ஃபோன் பேசிருக்காங்க. இதுவே ரெண்டு பேருக்கு இடையில காதலாவும் மாறிருக்கு.அதுக்கப்புறம், எந்நேரமும் மகேஷ் கூட சேட் பண்றது, கணவருக்கு தெரியாம ஊர் சுத்துறது, மகேஷ் வீட்டுக்கு அடிக்கடி போறதுன்னு இருந்துருக்காங்க பூர்ணிமா. ஆனா ரெண்டு பேரோட காதல் விஷயத்த அசோக் கண்டுபிடிச்சுட்டாரு. பூர்ணிமாவ சரமாரியா தாக்குன அசோக், உனக்காகவும், நம்ம மகனுக்காக தான உழைக்குறேன், ஆனா நீ உன்னோட ஆசைக்காக எவன்கூடவோ பழகிட்டு இருக்க, இதெல்லாம் குடும்பத்துக்கு நல்லது இல்ல, உடனே அவனோட பழகுறத நிறுத்து, அப்படி இல்லன்னா இந்த வீட்ட விட்டு வெளியில போய்ருன்னு சொல்லிருக்காரு. ஆனா கணவன் கண்டிச்சத ஒரு பொருட்டாவே எடுத்துக்கிறாத பூர்ணிமா, தொடர்ந்து மகேஷ் கூட ஊர் சுத்திட்டு இருந்துருக்காங்க. இதனால அசோக் தொடர்ந்து மனைவி கூட சண்டை போட்டுட்டே இருந்துருக்காரு.ரெண்டு பேரோட காதலுக்கு அசோக் இடையூறா இருந்ததா நினைச்ச பூர்ணிமா, கள்ளக்காதலனோட சேந்து கணவன கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. அதுக்காக மகேஷ் தன்னோட நண்பர் சாய் குமாரையும் சேத்துக்கிட்டான். சம்பவத்தன்னைக்கு மகேஷும், சாய் குமாரும் பூர்ணிமாவோட வீட்ல இருந்துருக்காங்க. சாயங்காலம் 6 மணிக்கு வேலை முடிஞ்சு கணவன் அசோக் வீட்டுக்கு திரும்பிருக்காரு. வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்ச அடுத்த நொடியே மகேஷூம், சாய் குமாரும் சேந்து அசோக்க சரமாரியா தாக்கிருக்காங்க. இதுல அசோக் சுருண்டு விழுந்து வலியில துடிச்சுருக்காரு. அப்ப பூர்ணிமாவோட துப்பட்டாவ வாங்குன மகேஷ், அசோக்கோட கழுத்த நெரிச்சு துடிக்க துடிக்க கொன்னுருக்காங்க. அடுத்து சடலத்த தரதரன்னு மாடிக்கு இழுத்துட்டு போய்ட்டு அங்கை போட்டுட்டு ரெண்டு பேரும் தப்பிச்சு போய்ட்டாங்க. பூர்ணிமா தன்னோட கணவன் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்துட்டாருன்னு நாடகமாடிருக்காங்க. ஆனா விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் பூர்ணிமா, மகேஷ், சாய்குமார் ஆகியோர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.