இந்திய தொழில்போட்டி ஆணையம் விதித்துள்ள 213 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த முடியாது என ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. தனிநபர் ரகசியத்தை மீறி இந்தியாவில் உள்ள பயனர்களின் தரவுகளை தனது வேறு செயலிகளுக்கு பயன்படுத்துவதாக கூறி மெட்டா நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.