பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதன் தொடர் விளைவுகள் குறித்து, வெளியுறவு அமைச்சகத்திற்கான எம்பி குழுவிடம் வெளியுறவு அமைச்சக செயலாளர் விக்ரம் மிஸ்ரி அடுத்த வாரம் விளக்கமளிக்க உள்ளார். வரும் 19 ஆம் தேதி எம்பிக்களிடம் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் விக்ரம் மிஸ்ரி எம்பிக்களிடம் விளக்குவார் என கூறப்படுகிறது.