திமுகவில் பொறுப்பாளர்கள் மாற்றம் என்பது களையெடுப்பல்ல, கட்டுமானச் சீரமைப்பு என, அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுபோல இன்னும் சில அறிவிப்புகளும் வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.