இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதங்களின் இருப்பு குறித்த விவரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய அணு ஆயுத விவரங்களை நேற்று ஒப்படைத்தது. அதே போல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் தங்கள் அணு ஆயுத விவரங்களை வழங்கியது.