டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகை பிரியங்கா மோகன், அடுத்ததாக டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்காங்க.இப்போ, ஜெயம் ரவியோட சேர்ந்து பிரதர் திரைப்படத்தில் நடிச்சிருக்காங்க.இந்தப் படத்தின் ஆடியோ லான்ச்சில செல்பி எடுக்க வந்த ரசிகரை பிரியங்கா மோகன் திட்டிய காட்சி வெளியானது.அதாவது, ஆடியோ லான்ச் நடைபெற்ற அரங்கத்தின் உள்ளே உட்கார்ந்திருந்த பிரியங்கா மோகனிடம், அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க வந்த ரசிகரை சிறிது நேரம் கடுமையாக பேசிய காட்சி வெளியானது.ஆனா, மறுபடியும் அவருடன் சிரித்தபடி செல்பியும் எடுத்துருக்காங்க.இப்போ, இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதில் பிரியங்கா மோகன் பக்கத்தில இருக்க நடிகை சரணியாவிடம் இவர் என் வீடு வரைக்கும் follow பண்ணீட்டு வந்ததாக சொல்லீருக்காங்க.