சமீபத்தில், பீகார் மாநிலத்தின், மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜெய்நகரில், தெளிவான வானிலை காரணமாக, உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் தென்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக வானம் மிகவும் தெளிவாக இருந்ததன் காரணமாக இந்த சிகரத்தை பார்க்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது. இதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை பீகாரில் பார்க்க முடிந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக காற்று மாசு குறைந்து இருந்ததால், இந்த சிகரம் தெளிவாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது.