நான் இருக்கேன் - அல்லு அர்ஜுன் உறுதி‘புஷ்பா 2’ பட சிறப்புக்காட்சியின் போது கூட்ட நெரிசல்ல சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்காக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது பரபரப்ப ஏற்படுத்துன நிலையில, இந்த வழக்குல அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுச்சு.இத தொடர்ந்து ஹைதராபாத்தின் சஞ்சல்குடா சிறையில இருந்து வெளியில வந்த அல்லு அர்ஜுன் சம்பவம் தொடர்பா ரொம்பவும் மனசொடிஞ்சு பேசியிருக்காரு..இதப்பத்தி அல்லு அர்ஜூன் பேசும்போது “எனக்கு ஆதரவளிச்ச எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நான் பாதுகாப்பா இருக்கேன்.எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. தனிப்பட்ட விதத்துல உயிரிழந்த பெண்ணோட குடும்பத்துக்கு என்னால ஆன எல்லா உதவிகளையும் கண்டிப்பா செய்வேன். இது ஒரு எதிர்பாராத விபத்து. எந்த விதத்துலயும் இதுகூட நான் நேரடியா தொடர்புடையவன் இல்ல.கைய மீறி நடந்த இந்த விபத்துக்காக எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்”னு ரொம்பவும் வருத்ததோட பேசியிருக்காரு.சூர்யா கூட படம் பண்ணப்போறதில்ல சூர்யா நடிப்புல சமீபத்துல வெளியான கங்குவா திரைப்படம் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்திச்சு எதிர்பார்த்த வசூல பெறாம தோல்வியடைஞ்சுது.இந்த நிலையில சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிச்சு பட விழாவுல இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்துள்ள பேச்சு நெகிழ்ச்சிய ஏற்படுத்தியிருக்கு ‘அலங்கு’ படத்தின் செய்தியாளர் சந்திப்புல இதப்பத்தி பேசுன மிஷ்கின், ”கங்குவா படத்த கொஞ்சம் கருணையோட விமர்சகர்கள் பார்க்கணும்.ஏன்னா சூர்யா ஒரு நல்ல, அழகான நடிகர். சூர்யாவ நாமதான் பத்திரமா பார்த்துக்கணும். நம்ம கையில சிவாஜி எம்.ஜி.ஆர். யாரும் இல்ல. ஆனா அவங்களோட பணியாற்றுன சிவக்குமார் இருக்காரு.அவருடைய குழந்தைங்கள நாம தான் பார்த்துக்கணும். உடனே நீங்க சூர்யாவுக்கு கத சொல்லப்போறீங்களான்னு என்ன விமர்சனம் செய்வாங்க. நான் சூர்யாவுக்கு கதையே சொல்லப்போறதில்ல. அவரே படம் கொடுத்தா கூட நான் ஒத்துக்க மாட்டேன். நான் கருணையோட பாருங்கன்னு தான் சொல்லவர்றேன்”னு கவலையோட சினிமா விமர்சகர்கள் மற்றும் மக்களுக்கு வேண்டுகோள் வச்சிருக்காருஇறந்த பெண்ணுக்கு குடும்பம் இல்லயா..?புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது எதிர்பாராத விதமா பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரமும், அதற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவமும் சினிமா வட்டாரத்துல பூதாகரமா பேசப்பட்டுவருது.இந்த வழக்குல அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில, இந்த சம்பவம் தொடர்பா தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆவேசமா பேசுன வீடியோ வலைதளங்கள்ல வைரலாகிட்டுவருது.தனியார் செய்தி சேனலின் விவாத நிகழ்ச்சி ஒன்னுல, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் போராட்டம் நடத்துறாங்களேன்னு நெறியாளர் ரேவந்த் ரெட்டியிடம் முன்வைத்த கேள்விக்கு, “நீங்க எல்லாரும் ஹீரோவ பத்தி மட்டும் பேசுறீங்க.ஆனா இறந்த அந்த பெண்ணோட குடும்பத்த பத்தி யாரும் பேசமாட்ரீங்க. அந்த பெண்ணோட மகன் கோமாவுல இருக்காரு. அவர் குணமாகி வந்து அம்மா எங்கன்னு கேட்டா நம்மகிட்ட பதில் இல்ல. அவனோட வாழ்க்கை இனி எப்படி போகும்னு தெரியல.ஆனா இதப்பத்தி யாரும் பேசுனமாதிரி தெரியல”ன்னு ஆவேசத்தோட பேசியிருக்காரு.சூர்யா 45 படக்குழு த்ரிஷாவுக்கு வாழ்த்துதமிழ் திரை உலகுல தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்துல நடித்துள்ளத தொடர்ந்து, மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி, கமலின் தக்லைப், ‘சூர்யா 45’ உள்ளிட்ட படங்கள்ல நடிச்சுட்டு வர்றாங்க.இந்த நிலையில சினிமாவுல த்ரிஷா தன்னுடைய 22 ஆண்டுகள பூர்த்தி செய்துள்ளத அவருடைய ரசிகர்கள் கொண்டாடிட்டு வர்றாங்க. இத தொடர்ந்து ”22YearsofTrisha” ஹேஷ்டேக்க சமூக வலைதளங்கள்ல பகிர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லிட்டு வர்றாங்க.. இத தொடர்ந்து சினிமாவுல த்ரிஷா 22 ஆண்டுகள பூர்த்தி செய்துள்ளத ‘சூர்யா 45’ படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருக்காங்க..இதுதொடர்பா ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்ன வெளியிட்டு த்ரிஷாவுக்கு வாழ்த்து சொல்லியிருக்காங்க.. சூர்யாவுடன் நடித்த ‘மவுனம் பேசியதே’ படம் மூலமாகத்தான் த்ரிஷா தமிழ் சினிமாவுல ஹீரோயினா அறிமுகமானாங்க.இந்த நிலையில, வீடியோல அந்த படத்த பத்தி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஜாலியா நினைவுபடுத்தவே, சூர்யாவும் த்ரிஷாவும் அது பற்றிய தங்களோட மெமரீஸை வீடியோல பகிர்ந்து நெகிழ்ந்திருக்காங்க..மௌனம் பேசியதே, ஆறு படங்கள தொடர்ந்து ‘சூர்யா 45’ படத்துக்காக சூர்யாவும் த்ரிஷாவும் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்ப ஏற்படுத்தியிருக்கு.மீண்டும் கல்லூரி மாணவனாக எஸ்.கே.?தமிழ் சினிமாவுல முன்னணி நடிகர்கள்ல முக்கியமானவரா வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில வெளியான அமரன் படம் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று, உலகளவில் 350 கோடிக்கு மேல் வசூலை வாரி குவிச்சிருக்கு.அடுத்ததா இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்துல தனது 23-வது படத்தை நடிச்சி முடிச்சிருக்காரு. தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்துல தனது 24-வது படத்துல நடிக்க இருக்காரு.. இந்த நிலையில, சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.மேலும் இந்த படத்துல சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவர் போல் நடிக்க உள்ளதாகவும், வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுச்சு. இத தொடர்ந்து ‘புறநானூறு’ படத்தோட முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருக்கு.தங்கலானுக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய பிரபலம்தமிழ் சினிமாவுல முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரு பிதா மகன், தெய்வத்திருமகள், கந்தசாமி, ஐ, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள்ல வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல நடிச்சு ரசிகர்கள கவர்ந்திருக்காரு.. இவர் கடைசியாக நடிச்ச தங்கலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் அருண்குமார் இயக்கத்தில் ‘வீர தீர சூரன் 2’ படத்தில நடிச்சு இருக்காரு. இந்த படத்தோட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படம் ரீலீசுக்கு தயாராகிட்டு வருது.இந்நிலையில், இவர் அடுத்ததா நடிக்க இருக்கும் படம் குறித்தான அப்டேட் மற்றும் அந்த படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகிருக்கு. யோகிபாபு நடித்த மண்டேலா, மாவீரன் போன்ற படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில விக்ரம் அடுத்ததா நடிக்க உள்ளதாகவும், இந்த படத்துக்கு அவர் 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கு.தங்கலான் படத்தில நடித்ததற்காக விக்ரம் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதா கூறப்படும் நிலையில, விக்ரம் கணிசமா தன்னுடைய சம்பளத்த உயர்த்தியிருக்காரு..