ஈக்வடாரில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பெரு விமானப்படை தீவிரம் காட்டி வருகிறது. தெற்கு ஈக்வடாரில் உள்ள குயிலங்காவில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயில் இதுவரை சுமார் 4 ஆயிரத்து 800 ஹெக்டேர் அளவிலான நிலங்கள் சேதமான நிலையில், அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தீ பற்றி எரியும் இடங்களுக்கு தீயணைப்புப் படைகள் செல்ல முடியாத நிலையில், பேரிடர் மேலாண்மை செயலகம் பெருவியன் விமானப்படையின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து பெருவியன் விமானப்படைகள் ஹெலிகாப்டர்கள் மூலம் வானிலிருந்து தண்ணீரை தெளித்து தீ அணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன