பெண்களின் பாதுகாப்பை குழி தோண்டி புதைத்து விட்டதாக, திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் கல்லூரி மாணவி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக வெளியாகும் செய்திகளால், தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியதாகவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார். திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று, சில மாதங்களுக்கு முன்பு அதிமுக சார்பில், கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை, தான் துவக்கி வைத்ததாகவும், இபிஎஸ் சுட்டிக்காட்டி உள்ளார். அண்ணாமலை கண்டனம்:பாலியல் குற்றங்களை தடுத்து பெண்களுக்கு பாதுகாப்பளிக்க திமுக ஆட்சி தவறி விட்டதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, 3 சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம், இழிநிலையில் உள்ளதாகவும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதையும் பாருங்கள் - மாணவி பா*யல் சம்பவம் "காவல்துறை இருக்கிறதா?" EPS கடும் கொந்தளிப்பு | HarassmentCase | Coimbatore