ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்ற கூற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி என பல்வேறு நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக, மகளிர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் இபிஎஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.