புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை, ஸ்டாலின் அரசு ஏமாற்றி விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதாக அறிவித்த கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தற்போது ஆந்திராவில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இபிஎஸ், முதலமைச்சர் நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? என வினவியுள்ளார். வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் திமுக ஆட்சி இருப்பதாகவும், நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும் எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.இதையும் பாருங்கள் - திமுக ஆட்சியில் எப்படி தொழில்கள் வரும்? - EPS கேள்வி | ADMK | Edapapadi Palanisamy | DMK | TNGovt