துணை முதலமைச்சராக பதிவேற்ற பின் முதல் முறையாக மதுரை சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மதுரை விமான நிலையத்தில் உதயநிதியை அமைச்சர்கள் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பிடிஆர் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் சென்ற கார் மீது தொண்டர்கள் பூக்களை தூவி ஆராவரம் செய்தனர்.