துபாயில் ஆங்கில புத்தாண்டு பிறந்ததும் அங்குள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. வாணவேடிக்கை மட்டுமின்றி லேசர் ஷோ உள்ளிட்ட வண்ணமயமான காட்சிகளால், புர்ஜ் கலீபா கட்டிடம் ஜொலித்தது. இதில் வாணவேடிக்கை மட்டும் சுமார் 9 நிமிடங்கள் நீடித்தது.