இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால், இங்கிலாந்து அணியின் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய வீராங்கனை பிரதிகா ரவாலுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.