டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான நேரம் என்பாதால் ஆகவே வரவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராக விரும்புவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஹாரி புரூக்கின் இந்த முடிவால், ஐபிஎல்-ன் புதிய விதிப்படி அடுத்த 2 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.