இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர் என்ற சாதனையை படைத்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் கருண் நாயரின் பேட்டில் உரசிச் சென்ற பந்தை முதல் ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட் இடது கையால் அபாரமாக கேட்ச் பிடித்தார். இது அவரது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 211-ஆவது கேட்ச் என்பதோடு, சாதனையாகவும் அமைந்தது.