மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிதி முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அங்கு நடைபெற்ற நிதி முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதுதொடர்பாக ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.