வட இந்தியர்களின் ஆதிக்கத்தால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளதாக அண்மைக்காலமா அதிகம் கேட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் அதை உறுதிப்படுத்தும் விதமாக செங்கல்பட்டில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த மறைமலைநகர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு பாலிமர் என்ற பெயரில் இயங்கி வரும் நிறுவனத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் 90 க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக ஊதியங்கள் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.ஊதியத்தை இரு முறை மூன்று முறை என்று பிரித்து பிரித்து வழங்குவதாகவும் நிர்வாகத்திடம் கேட்டால் முறையான வருமானம் வருவதில்லை, இதனால் தங்களால் இயன்றதை தான் ஊதியமாக கொடுக்க முடியும் என்றும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் பணியை தொடருங்கள், இல்லை என்றால் பணியை விட்டு செல்லுங்கள் என்பது போல் கூறுவதாக தொழிலாளர்களால் தரப்பில் கூறப்படுகிறது.இந்நிலையில் இது சம்பந்தமாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் நிர்வாகம் எதற்கும் ஒத்து வராததால் இன்று 90 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று காலையில் நுழைவாயிலில் யாரும் பணிக்குச் செல்ல வேண்டாம், வெளியில் இருந்து அவர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்மேலும் கம்பெனியில் வடமாநிலத்தவர்களை நிர்வாகத்தின் உள்ளேயே தங்க வைத்து அவர்கள் மூலம் வேலை செய்து வருவதாகவும் தமிழர்களை புறக்கணித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். முதலில் வட இந்தியர்கள் சிறு சிறு வேலைகளில் மட்டுமே தங்களை ஈடுப்படுத்தி வந்த நிலையில் தற்போது அனைத்து வேலைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். சென்னை கோவை போன்ற இடங்களில் மட்டுமே காணப்பட்ட இவர்கள் தற்போது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றனர். இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதாக கூறப்படுகிறது.