வரலாற்றில் எந்த மனிதரும் அனுபவிக்காத அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சாடியிருக்கிறார். டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்கு சலுகைகள் மட்டும் இல்லையென்றால், கடையை காலி செய்துவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.