அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லா அதிநவீன CYBER CAB ROBO TAXI-யை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் 'Cybercab' robo taxi அறிமுகப்படுத்திய அவர், இதன் விற்பனை 2026 ஆம் ஆண்டு முதல் தொடங்கவுள்ளதாக கூறினார்.இந்த robo taxi-யின் விலை இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் இருக்கும். தானியங்கி சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை கொண்ட ROBO TAXI செயற்கை நுண்ணறிவு மற்றும் கேமராக்களை நம்பியுள்ளது. மேலும் எலான் மஸ்க், 20 பேரை ஏற்றி செல்லும் திறன் கொண்ட மற்றொரு வாகனத்தையும் அறிமுகப்படுத்தினார்.