பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் பெங்களூரு வீராங்கனை எலிஸ் பெர்ரி முதலிடத்தை பிடித்துள்ளார். 25 போட்டிகளில் விளையாடியுள்ள எலிஸ் பெர்ரி 972 ரன்களை எடுத்து முதல் இடத்திலும், 26 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்டன் மெக்லானிங் 939 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.