மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 166 ரன்களை மட்டுமே எடுத்தது.