கேரள மாநிலம் மலப்புரத்திற்கு கோவில் திருவிழாவிற்காக கொண்டு வரப்பட்ட யானை மிரண்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். நிலம்பூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக கோவிந்தன் குட்டி என்ற யானை அழைத்து வரப்பட்டது. வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் போதே யானை மிரண்டு ஓடியதால் அங்கிருந்த பக்தர்கள் அச்சமடைந்தனர்.