ஊர்ல எது எதையோ திடுடிட்டு போனதா. போலீஸ்க்கு கம்ப்ளைண்ட் வரும். இவ்வளவு ஏன் கிணத்த காணோம்னு கூட கம்ப்ளைண்ட் பண்ணி இருப்பாங்க. ஆனா ஒரு யானையை திருடிட்டி போனதா வந்த கம்ப்ளைண்ட் போலீசாருக்கே ஹார்ட் அட்டாக் வர வச்சி இருக்கு. உத்தரபிரதேச மாநிலம், மிர்சாப்பூர சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா, போலீஸ் ஸ்டேஷனுக்கு அவசரமா ஓடி வந்து இருக்காரு. அவருக்கு என்ன பிரச்சனை என போலீசார் கேட்டபோது, தன்னுடைய யானையை யாரோ திருடிட்டி போனதா சொல்லி, போலீசாருக்கு தலை சுற்றலை வரவழைத்து இருக்கிறாரு சுக்லா. போலீசாரோட விசாரணையில், ஜெயமதி என்ற பெண் யானையை சுக்லா 40 லட்சம் ரூபாய்க்கு ராஞ்சியில் இருந்து விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்த நிலையில, அவரோட யானையை யாரோ திருட்டிட்டு போயிட்டதால, யானையை கண்டுபிடித்து தருமாறு கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்காரு. வேற வழியில்லாம, யானையை திருடு போனதா வழக்குப்பதிவு செஞ்ச போலீசார் கடைசியாக யானை எங்க இருந்ததுன்னு கேட்டு விசாரணை நடத்தி இருக்காங்க. அப்போது யானை சாப்ரா பகுதியில் இருந்தது தெரிய வந்து இருக்கு. உடனே சாப்ரா பகுதிக்கு சென்று யானையை கண்டுபிடிச்ச போலீசாருக்கு, அதை திருடியவர்கள் 27 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது. மீட்கப்பட்ட யானையை சுக்லாவிடம் ஒப்படைத்த போலீசார், யானையை கடத்தியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.