காங்கிரஸ் கட்சிக்கு தரம் தாழ்ந்த முறையில் பதிலளித்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. ஹரியானா தேர்தல் தொடர்பாக தங்களுக்கு எழுதிய கடிதத்தில், தரம் தாழ்ந்த முறையில் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் பதில்கள் தங்கள் கட்சி தலைவர்களை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.