தியாகத் திருநாளாம் பக்ரித் பெருநாளை முன்னிட்டு சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவின் பெரிய மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்கள் ஏக இறைவனை வேண்டி இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையை நிறைவேற்றினர். இஸ்லாத்தின் ஐந்தாவது தூணான ஹஜ் என்பது இஸ்லாமியர்களுக்கு வாழ்நாளில் ஒரு முறை தேவைப்படும் ஒரு மதக் கடமையாகும்.