மத்திய, மாநில அரசுகளின் மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். எக்ஸ் பதிவில், மத்திய அரசு நிதி வழங்காததால் தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.இனியும் தாமதிக்காமல் பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.