அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டதாக தகவல் வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவில் ஞானசேகரன் பொறுப்பில் இருப்பதை இத்துடன் பொருத்திப் பார்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் வலுப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். FIR-ல் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளதாகவும், அந்த நபர் யார்? யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அவர், இனி இந்த வழக்கை திமுக அரசின் காவல்துறை விசாரிப்பதற்கு தார்மீகத் தகுதியில்லை என காட்டமாக தெரிவித்துள்ளார்.