விழுப்புரத்தில், எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான ஆலையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து, மதுபான ஆலையில் இருந்து லாரிகள் மூலம் மதுபாட்டில்கள் எடுத்துச் செல்லும் பணி தொடங்கியது. அமலாக்கத்துறை சோதனையின் போது ஆவணங்கள் ஏதும் சிக்கியதா? என்ற விவரம் தெரியவரவில்லை.