கிரீஸுக்கு சொந்தமான சன்டோரினி தீவில் (( Santorini )) தொடர்ந்து 4ஆவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் தீவை விட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். சன்டோரினி தீவில் கடந்த 4 நாட்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கடலடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், முன்னெச்சரிக்கை மக்கள், வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.