அசாமின் துப்ரியில் (( Dhubri )) 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1:01 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ள தேசிய நில அதிர்வு மையம் புதன் கிழமை நியூசிலாந்தின் வடக்கு தீவில் 4.9 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் போது லேசான அதிர்வுகளை உணர்ந்ததாக பொதுமக்கள் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.