வருமான வரி தாக்கலில், 99 சதவிகிதம் பேரின் விண்ணப்பங்கள் எந்த சரிபார்ப்பும் இன்றி நம்பிக்கையின் அடிப்படையில் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், ஒரு சதவிகிதம் பேரின் வருமான வரித் தாக்கல் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொடர்ந்து வரி செலுத்தும் மனப்பான்மை ஊக்குவிக்கப்படுவதாக வரி விதிப்பு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.