அடுத்த மாதம் முதல் மாருதி சுஸுகி கார்களின் விலை உயர்கிறது. வாகனங்களில் மாடல்களை பொறுத்து நான்கு சதவிகிதம் வரை விலை உயரும் என பங்குசந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு, செலவின உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வதாகவும் அதை தவிர்க்க எந்த வழியும் இல்லை எனவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.