எல்லைப் பாதுகாப்பை அதிகரிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து கனடா, மெக்சிகோ மீதான 25 சதவீத வரிவிதிப்பை ஒருமாத காலம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை அந்நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.