இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில், பதிலடியாக, அந்நாட்டிடம் இருந்து 'பி - 81 பொசைடன்' போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ராணுவ அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து, 'பி - 81 பொசைடன்' போர் விமானங்களை நம்முடைய ராணுவ அமைச்சகம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.