அக்டோபர் மாதம் சில்லறை பணவீக்கம் ஆறு புள்ளி 21 சதவிகிதமாக அதிகரித்து விட்டதாக அரசு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 5 புள்ளி 49 ஆக இருந்த சில்லறை பணவீக்கமானது, விலைவாசி உயர்வு, ரிசர்வ் வங்கியின் உச்சபட்ச கட்டுப்பாடு ஆகியவற்றை மீறி அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் 9 புள்ளி 24 சதவிகிதமாக இருந்த உணவுப் பொருள் பண வீக்கம் கடந்த மாதம் 10 புள்ளி 87 சதவிகிதமாக அதிகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாத ரிசர்வ் வங்கியிடம், சில்லறை பணவீக்கத்தை நான்கு சதவிகிதத்திற்குள் கொண்டுவருமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டாலும் அது ஆறு சதவிகிதத்தை தாண்டியுள்ளது.