பெரு நாட்டின் வடமேற்கு பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோரல்ஸ் (( Corrales )) மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.