ஆப்கானிஸ்தான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக, பாகிஸ்தானில் தக்காளி விலை 400 சதவீதம் உயர்ந்துள்ளது. தரை வழி சண்டை மற்றும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அக்டோபர் 11ஆம் தேதி முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கதவுகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு நாளும், இரு தரப்பினரும் சுமார் 1 மில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை இழந்து வருகின்றனர். இதனால், பாகிஸ்தான் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ சுமார் 186 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் ஆப்பிள்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.