உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மழை காரணமாக கடும் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், நீண்ட தூரத்திற்கு கற்கள் சாலையில் அடித்து செல்லப்பட்டன. மேகவெடிப்பு காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சமோலி மாவட்டத்தின் கர்ணபிரயாக் நகரில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் கடும் மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு கார் முழுவதுமாக மண்ணில் புதைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.