துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் முதல் செட்டை 3க்கு 6 என்ற செட் கணக்கில் இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த இரு செட்களை 7 க்கு 6 , 10 க்கு 8 என கைப்பற்றி வெற்றி பெற்றது.