ஹங்கேரியா மற்றும் செர்பியாவில் டானூப் ஆறு வற்றிப்போனதால், இரண்டாம் உலகப்போரின் போது அதில் மூழ்கிய கப்பல்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக டானூப் ஆற்றின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதனால் இரண்டாம் உலகப்போரின் போது டானூப் ஆற்றியில் மூழ்கிய வெடிப்பொருட்கள் நிறைந்த நாஜிக் கப்பல்களின் சிதைவுகள் தற்போது கண்ணுக்கு புலப்பட ஆரம்பித்துள்ளன