ஏகலைவனின் விரலை வெட்டிய துரோணாச்சாரியாரை போல, இந்திய மக்களின் விரல்களை வெட்டுவதாக, மத்திய அரசு மீது மக்களவை எத்ரிக்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மக்களவையில் பேசிய அவர், அக்னி வீரர்கள் திட்டம் மூலம் இளைஞர்களின் கட்டை விரலையும், நாட்டின் செல்வங்களை அதானிக்கு தாரை வார்ப்பதன் மூலம் சிறு-குறு வணிகர்களின் கட்டை விரலையும் வெட்டுவதாக ஆவேசமாக கூறினார்