பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அனுபமா, மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள டிராகன் திரைப்படம், கடந்த 21ஆம் தேதி வெளியான நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.