அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம், வெளியான பத்தே நாட்களில் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டிராகன் படம், ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருவதோடு, வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.